4 மாத பெண் குழந்தை இஷான்வி. உலக சாதனை புத்தகத்தில் .....
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் பிரஜ்வல்- சினேகா. இவர்களின் நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி. மகள் பிறந்து இரண்டு மாதங்களிலேயே, தன் மகளிடம் சினேகா, சில பொருட்களை காட்டி, அறிமுகப்படுத்தி வந்தார்.ஒருநாள் ஒருபொருளை சுட்டிக் காட்டி, கேட்டபோது, சரியான பொருளை இஷான்வி அடையாளம் காட்டியது. இதனால் ஆச்சர்யமடைந்த சினேகா, மேலும் தான் சொல்லிக் கொடுத்த பொருட்களை அடையாளம் காட்ட ஊக்கப்படுத்தினார். இப்படியாக இஷான்வியும் பொருட்களை சரியாக அடையாளம் காணத் துவங்கியது. இதையறிந்த உறவினர்கள், நண்பர்கள், இதை வீடியோவாக பதிவு செய்து,நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு அனுப்பும்படி கூறினர்.அதன்படி பெற்றோரும், குழந்தையிடம் 10 பறவைகள், 10 வீட்டு விலங்குகள், 10 வெவ்வேறு பறவைகள், 10 பூக்கள், 10 வாகனங்கள், 10 விலங்குகள், 11 வண்ணங்கள், 15 காய்கறிகள், 14 பழங்கள், 13 பொது உருவங்கள், 12 வடிவங்கள் என, 125 பொருட்களை இஷான்வி அடையாளம் காட்ட பழக்கியிருந்தனர்.
இதை வீடியோவாக எடுத்து'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு பிரஜ்வல்- சினேகா தம்பதி அனுப்பி வைத்தனர். இதை ஆய்வு செய்த அமைப்பினர், நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி, புதிய உலக சாதனை படைத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இதனால் பெற்றோர், குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு மாத குழந்தை, 120 பொருட்களை அடையாளம் காண்பித்ததே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை இஷான்வி முறியடித்துவிட்டது.
0
Leave a Reply